கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், அக். 30: நாகப்பட்டினம் மின்வாரிய மேற்பொறியாளர் அலுவலகம் முன்பு எம்ப்ளாயீஸ் பெடரேசன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்ப்ளாயீஸ் பெடரேசன் மாநில செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாரதி முன்னிலை வகித்தார். இதில் விடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த பணியிட உத்தரவை நிறுத்த வேண்டும். மின்வாரிய அலுவலகங்களில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் இடங்களை நிரப்ப வேண்டும்.
கேங்க் மேன் என்ற பெயரை உதவியாளர் என மாற்றம் செய்ய வேண்டும். 65 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இறந்துபோன தொழிலாளர்கள் குடும்பத்துக்கு வழங்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. மாவட்டத் துணைத் தலைவர் வீராச்சாமி, ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் சார்லஸ், மாவட்ட செயல் தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கோட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.