மனிதநேய ஜனநாயக கட்சி கண்டனம்
வேதாரண்யம், ஆக.30: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சிதலைவர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் 5 குழந்தைகள், 10 குழந்தைகள் என்ற நிலை இருந்தது. அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு பிரச்சாரம் காரணமாக அது இரண்டு குழந்தை அல்லது மூன்று குழந்தை என்ற நிலையை அடைந்தது.
இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து போய், அரசியல் ரீதியான பாதிப்பும் ஏற்படும் நிலை . ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை குறைந்ததால் நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்படும் என்கிறார்கள். அரசின் நல்ல திட்டங்களை செயல்படுத்தியதற்கு பாராட்டு தெரிவிப்பதற்கு பதிலாக தண்டனையை தருகிறார்கள். நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். இனி திருமணம் செய்பவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.