தென்னம்பலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
வேதாரண்யம், செப். 27: வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகை வேண்டி 300 பேர் மனு அளித்தனர். தென்னம்புலம்ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் தென்னம்பலம் , மருதூர் வடக்கு , செண்பகராயநல்லூர் ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு நடைபெற்றது. முகாமை ஆத்மா குழு உறுப்பினர்கள் உதயம் முருகையன்,சதாசிவம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜூ, சிங்காரவேலு துணை வட்டாட்சியர் ராஜாமற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர். 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் இடம்பெற்றது. முகாமில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 600க்கும் மேற்பட்டோர் அனைத்து துறைகளுக்கும் மனு அளித்தனர். முகாமில் திமுகஒன்றிய துணைச் செயலாளர்கள் .இராஜகோபாலன், முத்துலெட்சுமி தென்னரசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தாமோதரன், உள்ளிட்ட கிராம மக்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்