பழைய ஓய்வூதியம் வழங்க கோரி தமிழ்நாடு அரசு அனைத்து துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், ஆக.27: தமிழ்நாடு அரசு அனைத்து துறை அலுவலர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் அரசு அலுவலர் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாநில செயலாளர் வளர்மாலா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், அனைத்து துறை ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிஐடியு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் பேசினர்.தேர்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 25 மாதங்களாக வழங்கவேண்டிய ஓய்வூதியர்களின் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும், 7வது ஊதியக்குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.