அண்ணா பல்கலைக்கழகம் பாராட்டு
கீழ்வேளூர், செப் .25: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள பொறியியல் கல்லூரி விளையாட்டு துறைக்கு அண்ணா பல்கலைக்கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் கீழ் மண்டலம் 15 விளையாட்டு ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு 21 விளையாட்டுப் போட்டிகளுக்கு மேல் தஞ்சாவூர் , புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ,மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு விளையாட்டுகளை பிரித்துக் கொடுத்து போட்டியிலே நடத்தி முடித்த பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி திருக்குவளை பொறியியல் கல்லூரி முதல்வர், மண்டல விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் மற்றும் விளையாட்டு செயலாளராக செயல்பட்ட உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார் ஆகியோருக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் விளையாட்டு வாரியத்தின் தலைவர்செந்தில்குமார், அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு செயலர்பாலகுமாரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ. மாணவிகள் கலந்து கொண்டனர்.