சீர்காழி பகுதியில் மீண்டும் மழை
சீர்காழி, நவ.21: சீர்காழி பகுதியில் சம்பா நடவு வயல்களில் மழைநீர் வடியத்தொடங்கிய நிலையில் நேற்று மீண்டும் மழைபெய்யத்துவங்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் மழை இல்லாமல் மேகமூட்டமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் சம்பா நடவு செய்த வயல்களில் புகுந்த மழை நீர் வடிவ தொடங்கிய நிலையில் விவசாயிகள் நிம்மதியடைந்தனர். ஆனால் நேற்று மதியம் மீண்டும் மழைபெய்ததால் மீண்டும் வயல்களில் நடவு செய்த வயல்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் முற்றிலும் சேதம் அடையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இடைவிடாத மழையால் சீர்காழி பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.