மயிலாடுதுறை வட்டாரத்தில் அரசுப்பள்ளி, நாற்றங்கால் பண்ணைகளில் கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை, ஆக.21: மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை வட்டாரத்திற்குட்பட்ட பட்டமங்கலம் கிராமத்தில் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, கொய்யா, வேம்பு, மாங்கன்று, பூசணங்கன்று உள்ளிட்ட மரக்கன்றுகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட கிளியனூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பார்வையிட்டு, மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்ததோடு, மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குத்தாலம் வட்டம் பெருஞ்சேரி அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியை கலெக்டர் பார்வையிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். இவ்வாய்வின்போது, மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் உடன் இருந்தார்.