சீர்காழி அருகே புதுக்குப்பம் சாலையை சீரமைக்க வேண்டும்
சீர்காழி, நவ. 19: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காவேரி பூம்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்குப்பம் கிராமத்தில் சாலை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மாணவ, மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன.
பல ஆண்டுகளாக சாலை பழுதடைந்துள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்கும் அவல நிலை இருந்து வருகிறது. புதுக்குப்பம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நலன் கருதி பல ஆண்டுகளாக பழுது அடைந்து இருக்கும் புதுக் குப்பம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.