8 இளநிலை கணக்கு அதிகாரிகள் இடமாற்றம்
காரைக்கால், செப்.19: புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் 8 இளநிலை கணக்கு அதி காரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத் வரும் ரமேஷ் பொதுப்ப ணித்துறை சிறப்பு கட்டி டங்கள் கோட்டம்-2க்கும், மீன்வளத்துறையில் பணிபுரிந்து புரியும் பாஸ்கரன் கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்துக்கும், பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டத்தில் பணியாற்றி வரும் கருணாகரன் மின் அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வேளாண்துறையில் பணிபுரியும் ஆதிசேக ரன் பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டத்துக்கும், தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் மங்க வெங்கடேஸ்வரலு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்துக்கும்,காரைக்கால் மின்துறை செயற்பொறியாளர் கோட்டம்-5ல் பணிபுரிந்து வரும் கோபால் புதுச்சேரி மின்துறை நகர கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
காரைக்கால் கணக்கு மற்றும் கருவூலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் வைத்தியநாதன் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் அலுவலகத்துக்கும், ஏனாம் பொது மருத்துவமனையில் பணிபுரியும் பெட்டலம் குமார் ஏனாம் பொதுப்பணித்துறை அலு வலகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.