கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், டிச.13: நாகப்பட்டினம் அவுரித்திடலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் கருணைநாதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பு செயலாளர் தர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். காவிரி நீர் பங்கீடு உரிமைக்காகவும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்திலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாத்திட போராடிய பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.