தரங்கம்பாடி பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர பள்ளம்
தரங்கம்பாடி, செப். 12: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தரங்கம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் அருகே சாலை ஓரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்த பாலத்தின் அருகே தடுப்பனைக்கு போகும் பாதையில் சாலை ஓரம் மிகபெரிய பள்ளம் உள்ளது.
Advertisement
வாகன ஓட்டிகள் வண்டியை மாறும் போது இந்த பள்ளத்தில் விழுந்து விடும் நிலை உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் பாலத்தில் இருந்து அந்த இடம் வரை சாலை ஓரம் தடுப்பு சுவர் அமைத்து விபத்து ஏற்படாமல் இருக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement