சாலோயோர குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
கொள்ளிடம், செப். 11: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஆணைக்காரன்சத்திரம் மற்றும் கோபாலசமுத்திரம் ஊராட்சி ஆகிய இரு ஊராட்சிகள் உள்ளன. கொள்ளிடம் கடைவீதியிலும் இரு ஊராட்சிகளின் எல்லையும் உள்ளது. இங்கு தினந்தோறும் வெளியேற்றப்படும் மக்கும், மக்காத குப்பைகள் கண்ட கண்ட இடங்களில் கொட்டப்படுகிறது. அந்தந்த இடங்களில் உற்பத்தி சுற்றுப்புற சுகாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது.
Advertisement
இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்களை பரப்புகிறது. எனவே தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டும் குப்பைகளை கொட்டவேண்டும். சாலையோரம் குப்பைகளை கொட்டுவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement