சீர்காழி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
சீர்காழி, செப். 10: பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 11ம் தேதி சீர்காழி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசூர் எடமணல், துணை மின் நிலையங்களில் வருகிற 11ம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வைத்தீஸ்வரன் கோயில் சீர்காழி புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம். ஆத்துக்குடி, திருப்புங்கூர், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிட முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சகாடு, கற்பகம் நகர், சீர்காழி புதிய பழைய பேருந்து நிலையம், புத்தூர் எருக்கூர், மாதிர வேலூர், வடரங்கம், அகணி, குன்னம், எடமணல், திட்டை, செம்மங்குடி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.