ஆற்றங்கரையில் பனை விதை நடவு செய்த மாணவர்கள்
கீழ்வேளூர், நவ.7: நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் ஊராட்சி காருகுடி வழியாக செல்லும் வெள்ளையாற்று கரையில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தல் மற்றும் ஆற்றுக் கரையை பலப்படுத்தும் நோக்கில் பனை விதை நடும் பணி நடைபெற்றது.
Advertisement
வலிவலம் தேசிய மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன், துணை தோட்டக்கலை அலுவலர் சிலம்பரசன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜவேல், அர்ச்சனா, மற்றும் கவுசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement