சின்னங்குடி பகுதியில் கடலில் குளிக்க ஊராட்சி நிர்வாகம் தடை
தரங்கம்பாடி, அக்.7: மயிலாடுதுறை மாவட்டம் சின்னங்குடி கடலில் இறங்கவும் குளிக்கவும் ஊராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தரங்கம்பாடி அருகே உள்ள சின்னங்குடி மீனவ கிராமமாகும். இது செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மருதம்பள்ளம் ஊராட்சியில் உள்ளது.
இங்கு 350 பைபர் படகுகள் மற்றும் 15 விசை படகுகள் மூலமாக ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள கடல் மிகவும் ஆழமானதாகும். எனவே சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதோ, குளிப்பதோ உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதால் மருதம்பள்ளம் ஊராட்சி தனி அலுவலர் சார்பில் ஒரு எச்சரிக்கை பலகை வைக்கபட்டுள்ளது. அதில் இந்த கடல் பகுதி ஆழமானது. சுற்றுலா பயணிகள் யாரும் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம். மேலும் இந்த கடற்கரை பகுதி தூய்மையாக பராமாரிக்கவும் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் என்ற எச்சரிக்கை பலகை கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.