நாகை எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
04:00 AM Aug 07, 2025 IST
நாகப்பட்டினம், ஆக.7: நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி செல்வக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் 14 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எஸ்.பி உறுதியளித்தார். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம் என எஸ்பி கூறினார்.