ஆயக்காரன்புலத்தில் திமுக இளைஞரணி சார்பில் சதுரங்க போட்டி
வேதாரண்யம், ஆக.7: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் நாகை மாவட்ட சதுரங்க கழகம் ஒன்றிய இளைஞரணி திமுக சார்பில் சதுரங்க போட்டி நடைபெற்றது. வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் தலைமை வகித்தார். வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி சதுரங்க போட்டியை துவக்கி வைத்தார். ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக், தொழிலதிபர் ராமசுப்பு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சதுரங்க போட்டியில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 404 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயக்காரன்புலம் பி.ஆர்.ஜி நினைவு அறக்கட்டளை சார்பில் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.