கொள்ளிடத்தில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் படத்திறப்பு விழா
கொள்ளிடம், நவ.6: கொள்ளிடத்தில் காங்கிரஸ் மூத்த உறுப்பினரின் உருவ படத்தை எம்பி சுதா திறந்து வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தில் மறைந்த மூத்த காங்கிரஸ் பாரத் சேகரின் உருவ பட திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுதா கலந்துகொண்டு திருவுருவப்படத்தை திறந்து வைத்து பேசினார்.
Advertisement
சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், முன்னாள் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் சந்திரபாண்டியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ராஜ்குமார், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன், முன்னாள் இந்தியன் வங்கி இயக்குனர் சரத் சந்திரன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் பட்டேல், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement