நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தில் கதண்டு கடித்த 2 பேருக்கு சிகிச்சை
நாகப்பட்டினம், நவ.6: நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தில் கதண்டு கடித்த 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாகப்பட்டினம் காடம்படியில் ஆர்டிஓ அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வந்துசெல்கின்றனர்.இந்நிலையில் அங்குள்ள ஆலமரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டு அங்கு வந்த பொதுமக்கள் ஐந்து பேரை கொட்டியது. இதில் அலறி அடித்து பொதுக்கள் ஓடினர். காயமடைந்த இரண்டு பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
Advertisement