1008 வளையல் சிறப்பு அலங்காரம்
சீர்காழி, ஆக. 5: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் கீழவீதி அருகே கோமளவல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற இக்கோயிலில் ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு வளையல் அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆயிரத்தியெட்டு வளையல்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.