தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம்
கொள்ளிடம், அக்.4: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் வாக்குத்திருட்டை கண்டித்து தேர்தல் கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியம், ரவி, ஆகியோர் முன்னிலை வசித்தனர். முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
கொள்ளிடம் கடைவீதியில் உள்ள கடைகள் தோறும் சென்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சீர்காழி முன்னாள் நகர மன்ற தலைவர் கனிவண்ணன்,முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர்,மாவட்டத் தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் ராமு, மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டேல், மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன்,நகர செயலாளர் பிரகாசம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.