கீழகாசாகுடி மேடு சுனாமி நகரில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் குழாய் பணிகள்
காரைக்கால், அக்.4: கீழகாசாகுடி மேடு சுனாமி நகரில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் குழாய் பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடி மேடு சுனாமி நகரில் சுமார் 15 வருடத்திற்கு முன்பு போட ப்பட்ட குடிநீர் குழாய் மூலம் அப்பகுதிக்கு சரிவர குடிநீர் வழங்குவதில் இடர்பாடுகள் ஏற்பட்டது.
இதனை போக்கும் வகையில் பொதுப்பணித்துறையின் மூலம் புதிதாக குடிநீர் குழாய் அமைப்பதற்காக சுமார் 70 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட இடத்தையும் , மதிப்பிட்டையும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஏ.எஸ். பி.எஸ். ரவி பிரகாஷ், நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார்.
கீழகாசாக்குடி மேடு சுனாமி நகர் பகுதியில் புதிதாக அமைக்க உள்ள குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் மகேஷ் (பொது சுகாதார கோட்டம்) விளக்கிகூறி னார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.