நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டத்தில் நவ.3ம் தேதி முதல் ஆதார் சேவை சிறப்பு முகாம்
நாகப்பட்டினம், நவ.1: நாகப்பட்டினம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: இந்திய அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன்படி நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் வரும் 3ம் தேதி முதல் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் வரும் 3ம் தேதி திருப்பட்டினம் ஜடாய்புரீஸ்வரர் மஹால், 6ம் தேதி அக்கரை வட்டம், 7ம் தேதி விழிதியூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் வரும் 3ம் தேதி கச்சனம், 4ம் தேதி மாவூர், 6ம் தேதி மாங்குடி, 7ம் தேதி கமலாபுரம், 8ம் தேதி அம்மையப்பன் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகிற 3ம் தேதி புறாகிராமம், மடப்புரம், அத்திபுலியூர், 4ம் தேதி கோகூர், திருப்புகலூர், பாலையூர், 6ம் தேதி ஆழியூர், பனங்குடி, 7ம் தேதி பட்டமங்கலம், செம்பியன்மகாதேவி, திருமருகல் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த ஆதால் சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய ஆதார் எடுத்தல், புதுப்பித்தல், பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்தல், மொபைல் எண் மாற்றம் செய்தல் போன்ற சேவைகளை பெற்று பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.