மேலக்கோட்டை வாசல் அருகே உள்ள பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும்
நாகப்பட்டினம், ஜூலை 28: நாகப்பட்டினம் மேலகோட்டைவாசல் அருகே உள்ள பூங்காகை சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மேலகோட்டை வாசல் அருகே நகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் மாலை நேரங்களில் குடும்பத்தோடு வருகை தருகின்றனர். எனவே இந்த பூங்காவை சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச்சங்க தலைவர் பாஸ்கரன் கூறியதாவது: நாகப்பட்ட்டினம் மேல கோட்டை வாசல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் பெரியவர்கள், தாய்மார்கள், மாணவர்கள், குந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். எங்கு பார்த்தாலும் மதுபாட்டில்கள், குப்பை செடிகள் மண்டி கிடக்கிறது.
இருக்கை மற்றும் நகராட்சி பூங்கா பலகை எல்லாம் உடைந்து கிடக்கிறது. இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுகின்றனர். கழிவறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.எனவே நகராட்சி நிர்வாகம் தலையிட்டு பொது மக்கள், மாணவர்கள், குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பூங்காவை சரி செய்து தர வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.