காரைக்காலில் பள்ளி நேரத்தில் இயங்கிய மணல் லாரி பறிமுதல்
காரைக்கால், ஜூலை 26: காரைக்கால் வருவாய்த்துறை வட்டாட்சியர் செல்லமுத்து தலைமையில், துணை வட்டாட்சியர் அரவிந்தன் மற்றும் வருவாய் ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் செல்கிறதா என்று நேற்று முன்தினம் மாலை சோதனை மேற்கொண்டனர். அப்போது திருப்பட்டினம் அருகே மண் ஏற்றிச்செல்லும் கனரக வாகனம் ஒன்று தார்ப்பாய் பொருத்தாமல் காற்றில் மண் பறக்க செய்தபடி சென்றது. இதனை கண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த லாரியை பறிமுதல் செய்தனர்.