கீழ்வேளூர் அருகே வேளாண்கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
கீழ்வேளூர், ஜூலை 26: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த திருக்கண்ணங்குடியில் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களின் 2025ம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
முகாமில் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரவி கலந்து கொண்டு விவசாயிகளுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் நெல் பயிறுக்கு இலை வழி உரம் உரம் இடுதல் குறித்து வயலுக்கு நேராகச் சென்று விளக்கம் அளித்தார். பின்னர், ட்ரோன் மூலம் 1 சதம் தழைச்சத்துக்கு யூரியா கரைசல் தெளித்தல் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நபார்டு வங்கியைச் சேர்ந்த துணை பொது மேலாளர் சுமித்ரா, மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஷ்வாந்த் கண்ணா, மேலாளர் மதனகோபாலகல்லூரி பேராசிரியர்கள் அனுராதா, தாமோதரன், சக்திவேல், காயத்திரி திரு,க்கண்ணங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி, விவசாயிகள் கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.