நாகப்பட்டினத்தில் நகரப்பகுதிகளில் புகையிலை விற்பனை தொடர்பாக சோதனை
நாகப்பட்டினம், ஆக.2: பொது சுகாதாரத்துறை சார்பில் நாகப்பட்டினம் நகரப் பகுதிகளில் புகையிலை தடுப்பு சோதனை மேற்கொள்ளப்பபட்டது. பள்ளி வளாகத்தைச் சுற்றி 100 மீட்டர் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் பீடி,சிகரட், போன்றவை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைகளில் புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற விளம்பரம் வைக்கப்படாத கடைகளுக்கு புகையிலை தடுப்பு சட்டம் 2003ன்படி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாகப்பட்டினம் நகர் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இ்நத சோதனையில் மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலர் வினோத்கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுத்தானந்தகணேஷ், மணிமாறன், ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.