கொள்ளிடம் அருகே செருகுடி ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
கொள்ளிடம், ஆக.3: கொள்ளிடம் அருகே சிறுகுடி கிராமம் ஓம் சக்தி மாரியம்மன் கோயிலில் பால்குடம் மற்றும் திருவிளக்கு பூஜை விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சியை சேர்ந்த செருகுடி கிராமத்தில் உள்ளமாதானம் அருகில் செருகுடி கிராமத்தில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் ஆலயத்தில் பால்குட உற்சவம் மற்றும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை ஆலயத்திற்கு முன்பு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள்பொடி, சந்தனம், பன்னீர், திரவிய பொடி, பால் தயிர் அகிவற்றால் அபிஷேகம் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களால் எடுத்துவரப்பட்ட பால்குட அபிஷேகமும் நிறைவு பெற்று தீபாராதனைக்குப் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை அம்மன் வீதி உலா காட்சியும் பின்னர் ஆலயத்திற்கு முன்பு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு தாலி கயிறு, மஞ்சள் குங்குமம், பழங்கள் உள்ளிட்ட மங்கள் பொருட்கள் திருவெண்காடு சிவன் சார் சமஸ்தானம் மூலம் வழஙகப்பட்டது. விழா நிகழ்வில் தர்மசக்தி சேனை நிருவனர் பரமகுரு சீர்காழி சங்கர் சுவாமி, உத்திர ராஜேஷ், விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டல செயலாளர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் திருலோகசந்தர் மற்றும் உள்ளூர் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.