தென்னம்புலம் தூண்டில்காரன் கோயில் உண்டியல் திருட்டு
வேதாரண்யம், ஜூலை 31: வேதாரண்யம் தாலுகா தென்னம்புலம் தூண்டில்காரன் கோயில் உண்டியலை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். வேதாரண்யம் தாலுக்கா தென்னம்புலம் தூண்டிகாரன் கோயிலில், கடந்த வாரம் உண்டியலை திருடு போனது குறித்து ஆலய நிர்வாக குழுதலைவர் பாவலன், கரியாபட்டிணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், கரியாபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன் தினம் ஊர் பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில், தென்னம்புலத்தை சேர்ந்த மணிகண்டன் வயது (28), ராஜ்குமார் (27) மற்றும் இளம்சிறார் ஒருவர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி கோயில் உண்டியலில் திருடிய ரூ.7815 பணத்தை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.