நாகையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் போராட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 31: நாகை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் கையில் தீப்பந்தம் ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் வட்ட தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் உதயகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் பேசினர்.
அப்போது, சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் குடுபத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இறுதியில் மாவட்ட பொருளாளர் பாலமுரளி நன்றி கூறினார்.