செம்பனார்கோயில் பகுதியில் 61 கிலோ போதை பொருட்கள் பதுக்கியவர் கைது
செம்பனார்கோயில், ஜூலை 30: செம்பனார்கோயில் பகுதியில் 61 கிலோ போதை பொருட்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் போலீஸ் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்.இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், தனிப்பிரிவு போலீஸ் மணிகண்டன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது செம்பனார்கோயில் பகுதியில் மயிலாடுதுறை கூறைநாடு அண்ணா வீதியை சேர்ந்த பெருமாள் மகன் பால்பாண்டியன் (38) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட 61 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த போதை பொருட்களை கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக செம்பனார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியனை கைது செய்தனர்.