முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்
மயிலாடுதுறை, ஜூலை 30: இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி, ஒரு குடும்பம் ஆண்டிற்கு 5 இலட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து தாலுக்கா வாரியாக நடைபெறுகிறது.
சமர்பிக்க வேண்டிய ஆவணங்களான, குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் (ஆண்டு வருமானம் ரூ.1,20,000), குடும்ப உறுப்பினர் ஆதார் நகல், ஆண்டு வருமான வரம்பு இல்லாதவர் பட்டியல் (விதவைகள், ஆதரவற்றவர்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள், மாற்றுத்திறனாளிகள்). இது தொடர்பாக பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துக் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.