திருக்குவளை விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம்
நாகப்பட்டினம், ஆக 1: திருக்குவளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கீழையூர் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கீழையூர் வட்டார ஆத்மா தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை திட்டங்களை ஆத்மா குழு உறுப்பினர்களுக்கு விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து விவசாயிகளுக்கு பயிர் வகை விதைகள் வழங்கப்பட்டது. வட்டார வேளாண்மை தொழில் நுட்ப அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.