திருமருகல் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
நாகப்பட்டினம், ஜூலை 28: திருமருகல் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலு, பொருளாளர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிந்தன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் தர்மராஜ் பேசினார்.
அப்போது, திருமருகலை மையமாக கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.