காரைக்காலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பத்திற்கு உதவித்தொகை
காரைக்கால், ஜூலை 26: காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தருமபுரம் வடக்கு தெருவில் உள்ள விக்னேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வீடு திடீரென தீ விபத்துக்குள்ளானது. தீ விபத்தால் வீடு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் வருவாய்த்துறை மூலம் அந்த குடும்பத்திற்கு தலா ரூ.20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நிவாரண பொருட்களையும் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கினார். இந்நிகழ்வில் துணை வட்டாட்சியர் அரவிந்தன், வருவாய் ஆய்வாளர் கமலஹாசன் மற்றும் துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.