நாகப்பட்டினம் மாவட்டம் திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 23: நாகப்பட்டினம் மாவட்ட வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் தளபதி அறிவாலயத்தில் நடந்தது. நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமை வகித்தார்.வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளரும், தலைமை கழக வழக்கறிஞருமான தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். சட்டத்துறை செயலாளர் இளங்கோ தலைமையில் நாகை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பயிற்சி பாசறையில் வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் பேருந்திரளாக கலந்துகொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றபட்டது.
மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சிங்காரவேலு, துணை தலைவர் அன்பரசு, துணை அமைப்பாளரகள், சாபரத்தினம், பாஸ்கர், செந்தில், வினோத், அரசு வழக்கறிஞர்கள் செல்வராஜ், ஜெய்சங்கர், அன்பழகன், சிவகுகுருநாதன்,தேவி, மாவட்ட தகவல்தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பரிபாலன், மற்றும் ரெஜினாமேரி உள்ளிட்ட ஏராளமான திமுக வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்