பனம் பெற்றுக்கொண்டு வீடுகட்டி தராததால் முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
மயிலாடுதுறை, செப். 30: மயிலாடுதுறையில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு கட்ட பயனாளியிடம் ரூ.1,40,000, பெற்ற ஓவர்சியர். இதுவரை வீடு கட்டி தராததால் மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, அரசிலங்காடு தெற்கு தெருவில் வசிப்பவர் சம்பந்தம். இவருக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு வீடு கட்ட உத்திரவிட்டுள்ளது. ஆனால் ஓவர்சியர் சிதம்பரநாதன் (S/o மஞ்சு கொத்தனார் ) என்பவர் சம்பந்தத்திடம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பணத்தை பெற்று கொண்டு இதுவரை வீடு கட்டியும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சம்பந்தம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த சம்பந்தம் நேற்று நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் நாளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர் கலெக்டர்அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்க வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டது.