காரைகாலில் விபத்தில் காயமடைந்த மாணவிக்கு எம்.எல்.ஏ ஆறுதல்
Advertisement
காரைக்கால், அக்.29: காரைக்காலில் பேருந்து விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நாக தியாகராஜன் எம்.எல்.ஏ
காரைக்கால் அன்னை தெரசா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி பவித்ரா நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக பள்ளி மாணவர்கள் பயணிக்கும் பேருந்தின் தான் இயங்கி கதவு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காது பகுதியில் அடிபட்டு காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்த நிரவி திருப்பட்டிணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் நேற்று மாணவியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி சிறந்த மருத்துவம் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
Advertisement