ஆனந்தகூத்தன் அரசு நடுநிலைப் பள்ளியில் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் மாணவர்களின் கற்றல் திறன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆய்வு
கொள்ளிடம், அக்.26: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆனந்த கூத்தன் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி பார்வையிட்டு மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.இதில் தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி, ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், அஜிதா, ஆய்வக பயிற்றுநர் சுதந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி கூறுகையில், உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் மூலம் 6 முதல் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் ஆங்கில புலமை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
கல்வியால் தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கத்தில் தமிழக முதலமைச்சர் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியில் இந்தியாவிலயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தை சரளமாக கற்பதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் உலக அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தில் முதன்மை இடம் பெற இந்த ஆய்வகம் பயன்பெறும். கொள்ளிடம் ஒன்றியத்தில் இத்தொழில் நுட்பத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் பயனடைந்து வருகின்றனர் என்றார்.