தாணிகோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.38 கோடியில் 5 வகுப்பறை கட்டும் பணி
வேதாரண்யம், செப்.24: தாணிகோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி ரூ. ஒரு கோடி 38 லட்சம் செலவில் 5 வகுப்பறை கட்டும் பணி தொடக்கம். வேதாரண்யம் தாலுகா தாணிக் கோட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஐந்து வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுபள்ளிகளுக்கான புதிய கட்டிடங்கள் வகுப்பறைகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவினை காணோளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
அதைத்தொடர்ந்து வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு கோடியே 38 லட்சம் செலவில் 5புதிய வகுப்பறை கட்டிடம்கட்டுவதற்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதயம் முருகையன் அடிக்கல் நாட்டினார் நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக சோழநம்பி மற்றும் ஒப்பந்ததாரர் கார்த்திக்,ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் பள்ளி தலைமை ஆசிரியர்கார்த்திகேயன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.