தரங்கம்பாடி பகுதியில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
Advertisement
தரங்கம்பாடி, செப். 22: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துகட்டி, சங்கரன்பந்தல், நல்லாடை, கரிகுடி, திருவிளையாட்டம், ஈச்சங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் பம்ப்செட் மூலம் குறுவை சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அறுவடைக்கு பின் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பா சாகுபடிக்காக நாற்றங்காலை சரிசெய்தல், விதைவிடுதல், நாற்று பறித்தல், நடுவதற்காக வயலை சமன் செய்தல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தாலும் அறுவடை முடிந்த நிலையில் உள்ள விவசாயிகள் சம்பா சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement