இயற்கை வேளாண் குறித்து விழிப்புணர்வு கூட்டம் இயற்கை விவசாயிகளுக்கு ரூ.5.85 லட்சம் கடன் உதவி
நாகப்பட்டினம், செப்.22: நாகபட்டினத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்றது. பயிர் சாகுபடி முறைகளில் மண் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 200 விவசாயிகள் இதில் கலந்து கொண்டு, நிபுணர்களுடன் கலந்தாலோசனை நடத்தினர். பல்வேறு பயிர் சாகுபடி குறித்தும் நோய்கள் நிலச் சத்து குறைபாடு மற்றும் பகுதி சார்ந்த சாகுபடி சவால்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 6 இயற்கை விவசாயிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கடன் திட்டமான ஹரித் கிரந்தி மூலம் மொத்தம் ரூ.5.85 லட்சம் சீர்காழி மற்றும் தோப்புத்துறை கிளை மூலம் வழங்கப்பட்டது.