கோபாலசமுத்திரம் ஊராட்சியில் மழையால் சேறும் சகதியாக காமராஜர் தெரு சாலை
Advertisement
கொள்ளிடம், டிச.6: கொள்ளிடம் ஒன்றியம் கோபாலசமுத்திரம் ஊராட்சியில் காமராஜர் தெரு சாலை மழையால் சேறும் சகதியாக மாறியதால் சாலையை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சியயை சேர்ந்த, பாரத் சேகர் நகர் உள்ளது. இந்த நகரில் காமராஜர் தெரு மற்றும் பால்வாடி தெரு உள்ளது. இப்பகுதியில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில், சாலையோரம் உள்ள வடிகால் குழாயில் சாக்கடை நீர் தேங்கியிருந்ததால் சாலை மோசமடைந்து சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
Advertisement