மயிலாடுதுறையில் ஆளுனரை கண்டித்து திக ஆர்ப்பாட்டம்
Advertisement
மயிலாடுதுறை, டிச.5: மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு திராவிட கழகத்தினர் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழக மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமையில் மாவட்ட செயலாளர் தளபதிராஜ் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ,தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு,தமிழர்களை இழிவுபடுத்திவரும் ஆளுநர் ரவியின் அராஜக போக்கை கண்டிக்கிறோம்.
Advertisement