எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தேர்வு
கொள்ளிடம், செப். 3: கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி நேற்று நடைபெற்றது. அனைத்து கல்லூரி மாணவர்களுடன் புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இதில் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி விளையாட்டு போட்டியில் மயிலாடுதுறை சாய் விளையாட்டுக் கழக அணியும், புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி அணியும் கலந்துகொண்டுவிளையாடின. இதில் புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களே வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டனர். தற்போது நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் மாவட்டத்தில் முதலிடத்தில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புத்தூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் சசிகுமார், உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன் ,மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மாணவர்கள் பெரிதும் பாராட்டினர்.