5ம் தேதி நடைபெற இருந்த மருத்துவ முகாம் வரும் 20ம் தேதிக்கு மாற்றம்
நாகப்பட்டினம்,செப்.3: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரதி மாதம் முதல் வெள்ளிக் கிழமை வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், 2வது செவ்வாய்கிழமை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் 5ம் தேதி நடைபெறவிருக்கும் முகாம் மிலாடி நபி பண்டிகை அரசு விடுமுறை தினம் என்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் வரும் 20ம் தேதி வேதாரண்யம் வட்டம் வானவன்மகாதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவிருக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இம்முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவ நிபுணர்களும் கலந்து கொள்ள இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement