பொதுமக்கள் பங்கு பெற அழைப்பு நாகை மாவட்டத்தில் மிலாடி நபி முன்னிட்டு 5ம் தேதி டாஸ்மாக் விடுமுறை
நாகப்பட்டினம்,செப்.3: நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு வரும் 5ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடவேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Advertisement
நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 5ம் தேதி ஒருநாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள், தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பார்கள் விதிகளின்படி தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981ன் கீழ் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Advertisement