கொள்ளிடம் அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது தாய், மகள் உயிர் தப்பினர்
கொள்ளிடம், டிச.2: கொள்ளிடம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தாய் மற்றும் மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயர்தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கீழவல்லம் கிராமத்தைச் சேர்ந்த பவானி (40). இவர் 12ம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு படிக்கும் இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 1986ம் ஆண்டு அரசு கட்டிக்கொடுத்த தொகுப்பு வீ்ட்டின் கூரை பகுதி சேதமடைந்துள்ளதால் கீற்றினால் மேற்கூரை அமைத்து அதில் பவானி குடியிருந்து வருகிறார். தினக்கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று பவானி தனது இரு மகள்களுடன் வீட்டிற்குள் இருந்தபோது வீட்டின் சுவர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த தாய், 2 மகள்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீட்டை இழந்து தவிக்கும் பவானி குடும்பத்தினருக்கு நிவாரண உதவியும், அரசின் கான்கிரீட் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.