கூறைநாடு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்
Advertisement
மயிலாடுதுறை, டிச.2: மயிலாடுதுறை கூறைநாடு நகராட்சி கிட்டப்பா மேல்நிலை பள்ளியில் மழைநீர் தேங்கி உள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளித்து மழை நீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் தீவிர பணியில் இறங்கி உள்ளது. மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் அமைந்துள்ளது நகராட்சி கிட்டப்பா மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 தினங்களாக டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறையில் கன மழை பெய்தது. இதனால்ம பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. நகராட்சி கிட்டப்பா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement