அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா தமிழகத்தை காப்போம் என திமுகவினர் உறுதி
சீர்காழி, செப். 16: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் திமுக நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சட்டநாதபுரம் செங்க மேட்டில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அனைவரும் தமிழகத்தை காப்போம் என உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராம இளங்கோவன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன் திமுக நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், திமுக மாவட்ட பிரதிநிதி பாஸ்கரன், சீர்காழி நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரவின், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.